Sunday, 18 December 2016

DO YOU KNOW CHITTA ADANGAL ?



 சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு  இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.


கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.


தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.

இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்கல் விவரம் 
பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.






சிட்டா: 

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: 
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: 
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: 
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: 
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: 
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்:
 நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று:
 ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: 
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:
 குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: 
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு:
 நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: 
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net
என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

-RCS
rcs.hrr@gmail.com


Thursday, 15 December 2016

POWER OF ATTORNEY



P   O  W   E   R    O  F    A  T   T  O  R  N   E   Y


பொது அதிகார பத்திரம் (power of Attorney)
ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத் திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடய  நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்.
அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலை களைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் (Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.
Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:
1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.


Power of Attorney இரண்டு வகைப்படும்:

1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
இதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங் களில் சொத்து தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங் களும் வழங்கப்படும்.
2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப் படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.
மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக் கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக் கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
1. நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவல கத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document)விண்ணப்பம் செய்து பெற வேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக் கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.
2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம் செய்யக்கூடாது.
01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங் கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப் பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும்.


Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:
பவர் எழுதி கொடுப்பவர்
பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )


1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)
5. இரு அத்தாட்சி (Two witness)

பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?

ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படா விட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக் கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Original பத்திரத்தை பார்த்த பிறகுதான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக் கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.
மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவு செய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்த மான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவ ரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்


-RCS

Wednesday, 14 December 2016

WHAT IS MEAN BY GRAMA NATHAM LAND ?



What is meant by Grama Natham Land?


Grama Natham is not a property of the Government and the title cannot be transferred back to the Government under the operation of Tamilnadu act III of 1905, Section 18(1) of 1948 act and land encroachment act of 1905.

 Grama Natham is defined in law lexicon as a land upon which houses can be built in a village. The terminology “Grama Natham” was brought into existence in order to stress that the land could be used as house sites where the owner of the land could build houses. This was used to differentiate house sites from Government held land such as Inam land (gift land), ryotwari land (currently abolished system of assessment where land revenue was imposed directly on the individual cultivators called ryots), pannai lands and waste lands.

Grama Natham land is often available at a lower cost especially around the suburbs of Chennai. The meaning of Grama Natham can be defined using scholarly articles and the more valuable court judgments. The word Grama Natham may also be termed as Natham lands. These terms have been used since a very long time which includes the pre-independence period.

Can Patta be obtained for Grama Natham Land?
In Grama Natham, the first occupier of the land is considered as the rightful owner and generally no Patta is issued to him/her. However it is still possible to apply for Patta when owning a Grama Natham land.
 Pooramboke land are often compared with Grama Natham. “Poram “ means outside and “poke” means revenue record. Hence the complete word “poramboke” can be defined as a land which lies outside the revenue records. By such definitions, any piece of land can be classified either as Privately owned Patta land, Government Poramboke land or Grama Natham land.
In a case between Muthammal against the State of Tamil Nadu, Mr.T.R.Mani, counsel in the case said
For Grama Natham land, the first occupier will be treated as the owner and no patta will be given to them. Patta is issued only for assessed lands and it is the settled law.”
Although Grama Natham can be used for building a house, there is always a risk of litigation when Government needs the land for developmental projects. In a case between A.R.Meenakshi against the State Government of Tamil Nadu on the 14th of June 2013, it was ruled that the Government cannot claim title over Grama Natham. However, the Government was allowed to construct a subway on the Grama Natham land by paying a compensation to the owner of land. It is also important to note that these legal proceedings can cost time and money to the land owner.

Should I buy Private Patta Land or Grama Natham Land?
Private Patta lands are under the revenue records and hence can be considered to be much easier to own and transact. The availability of Patta can avoid litigation when Government claims that the land is a Poramboke land. This has been the prime reason for higher cost of Patta lands although Grama Natham can also be used for building a house. Purchasing a Grama Natham land can always be a risky investment although legally one can build a house on a Grama Natham land while enjoying the benefits of lower initial cost. These Grama Natham lands may be less liquid when compared to Patta lands as there are fewer buyers for Grama Natham properties. If a Grama Natham property is owned by an individual, applying for Patta is still feasible but is not easy to obtain. It might be important to apply for Patta when owning a Grama Natham land as it might act as a positive attribute where litigations are involved.
It is vital to note that Grama Natham land can never be used for commercial activities. These lands are house sites and must be actively used by the land owner. If the Natham is unoccupied, it will be classified as Poramboke natham as decided in the hearing in Madras High court on 28th September 2012 between Vadivelu and Natesan. When such Poramboke Nathams are concerned, the Government acts as custodian and may allocate the piece of land to an individual. Hence Grama Natham may not be an ideal investment if the buyer does not have intentions to build a house and actively reside in it.


Can I buy GramaNatham land and use it for Joint Venture to construct apartment?
Gramanatham lands cannot be used for commercial activities. A joint venture to construct apartment complex on such a land is treated as a commercial activity. Any activity that does not clearly show the intent of the owner of Grama Natham to reside on the land himself/herself as the sole owner can be classified as commercial activity. In June 2011, a judgement was passed in the Madras High Court on a joint venture project built on a Grama Natham Land. K.Narasa Reddy had entered into a joint venture to construct stilt+4 floors of apartment complex at a plot in Reddy street in Virugambakkam. Since the apartment was built on a Gramanatham land, the Madras High court ruled that this activity could be classified as commercial activity and a judgement was passed to protect such Gramanatham lands from similar commercial exploitations
.
Never Buy Grama Natham land for commercial purposes!
Is Grama Natham patta similar to Patta given for private land?
Patta issued under UDR scheme in order to enforce tax on grama natham lands which are called as Thoraya Patta are not similar to patta issued under the land encroachment act. As per Tamil Nadu land encroachment act of 1905-section 2, Thoraya Patta is granted in order to levy tax and cannot be used to confer title in whose name patta was obtained. UDR patta can be issued only to a person residing and enjoying the premises upon physical examination of the property.

How can we get patta for Grama Natham?
Natham pattas are issued to an eligible person, subject to conditions that the applicant produces documents to prove his/her title, prolonged and continuous possession and enjoyment, over the land.
In a verdict passed in January 2011 at the Madras High Court on a case between B.Ravi and the Principal Secretory & commissioner of land administration of Chennai, the latter confirmed that
Natham pattas were issued to the individual to an eligible extent if they produce documents to prove their title, continuous possession and enjoyment, over the land"
The adangal records may be checked to confirm that the land is not classified as Government poramboke natham. The feasibility and process to obtain patta for Grama natham lands can be confirmed at the VAO

TSLR is enough and the same is synonymous to patta. Grant of loan by a bank against the security of natham land would depend on their internal policy.


-RCS

Monday, 28 November 2016

PANCHAYAT APPROVAL VS DTCP VS CMDA APPROVAL OF LAND


WHAT IS THE DIFFERENT BETWEEN
PANCHAYAT APPROVAL AND DTCP VS CMDA? 



Panchayat approval vs DTCP vs CMDA approval of land

The most commonly marketed plots in and around Chennai include Panchayat, CMDA and DTCP approved plots. There are numerous questions on the layouts approved by nodal authorities or town planning authorities.



The commonly marketed layouts which do not have approval are often marketed as Panchayat approved lands. This terminology has been unofficially associated with layouts which are unapproved by town planning authority (e.g. DTCP)The application for regularization often includes fees titled as penalization charges which will consider the total plot area. The penalization charges include betterment charges and development charges. Since this approval causes reduction in open spaces within the city, a fee called OSR (Open Space Reservation) charge is levied.

The major benefit of getting approval from DTCP or CMDA is the entitlement to get building approval. This can be an assurance that the building cannot be demolished without proper procedure laid out for approved layouts. The demolition of buildings constructed on approved land is quite uncommon and is often discouraged, without strong justification, by the legal system. These benefits are unavailable for unapproved layouts. The property value will also increase substantially if approval is sought and this will increase the resale value. The scope of transparency in transaction is increased and resale is also easier. Banks will only be able to fund building construction or renovation when the land is approved.

The disadvantages of owning unapproved land are numerous. The penalty levied increases with the length of period for which the unapproved plot is owned including the period prior to the execution of sale deed. It is often considered illegal to provide water and sewer connections to such buildings constructed on unapproved land. As building plan approval will not be provided for such unapproved plots, possibility of demolition of such buildings cannot be discounted.

The Directorate of Town and Country Planning (DTCP) is responsible for carrying out developmental activities on land and buildings in Tamil Nadu with the exception of municipal areas in Chennai. 




 The approval from DTCP or CMDA carry the benefit of owning a land which can be used for the specific purpose that is designated by the planning authority. The approval process involves time and cost which are often the main reasons due to which many developers prefer to sell unapproved layouts. The state government allows approval of such unapproved plots by floating schemes which offer regularization against a fixed fee. The approval process can also be initiated by contacting the respective planning authorities without the special schemes but is often not an easy process for individuals. The State Government is planning for such a scheme in Tamil Nadu and the details can be found in the article titled “Get approval for unapproved plots in Chennai”

-RCS

Saturday, 26 November 2016

HOW TO GET PATTA ? AND ITS IMPORTANCE



Add caption
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். 

பட்
டா பெயர் மாற்றம்;
*********************************


ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். 

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம். 

உட்பிரிவு பட்டா:
************************

அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும். 

உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும். 

கவனமாக இருக்க வேண்டும்:
*********************************************

இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும். 

காலம் தாழ்த்தக்கூடாது:
**************************************

அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக (SUB DIVISION) தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும். 

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.


                                                                                                                                         -RCS

Friday, 25 November 2016

WHAT IS THE MEANING OF REAL ESTATE ?


ரியல் எஸ்டேட்னா என்னங்க அர்த்தம்?




கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வர்த்தக உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் இருக்குமெனில், அது ‘ரியல் எஸ்டேட்’ எனும் பதமாகத்தான் இருக்கும்.
இந்த வார்த்தையின் அசலான அர்த்தம் என்ன?
ரியல் எனும் சொல் லத்தீன் மூலச் சொல்லான ‘ரெஸ்’ எனும் சொல்லில் இருந்து பிறந்தது. ‘ரெஸ்’ என்றால் லத்தீன் மொழியில் ‘பொருள்’ என்று பொருள். ஆனால் 18–ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி விஸ்வரூபம் எடுத்த காலத்தில் ‘ரியல்’ எனும் சொல் ‘சொத்து’ என்பதைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்தில் வரலாயிற்று.
எஸ்டேட் எனும் சொல் இயற்கையான ஆதாரங்களைக் குறிக்கும் பதமாகும். ஆக, ரியல் எஸ்டேட் எனும் சொல் வழக்கு ‘பயிர்கள், கனிம வளம், நீர் ஆதாரம் ஆகியன உள்ளிட்ட அசையாச் சொத்தை’ குறிக்கும் சொற்றொடராக பரிமாணம் அடைந்தது. இன்று இந்த அர்த்தத்தில்தான் ‘ரியல் எஸ்டேட்’ எனும் சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
 இன்று ரியல் எஸ்டேட் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகும் ஒருவர், அந்தச் சொத்தின் அனைத்துப் பயன்களுக்கும் உரிமையாளர் ஆகிறார். அந்தச் சொத்தின் அடியில் இருக்கும் கனிம வளத்துக்கும் கூட அவரே அதிபதி ஆகிறார.