ரியல் எஸ்டேட்னா என்னங்க அர்த்தம்?
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வர்த்தக உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் இருக்குமெனில், அது ‘ரியல் எஸ்டேட்’ எனும் பதமாகத்தான் இருக்கும்.
இந்த வார்த்தையின் அசலான அர்த்தம் என்ன?
ரியல் எனும் சொல் லத்தீன் மூலச் சொல்லான ‘ரெஸ்’ எனும் சொல்லில் இருந்து பிறந்தது. ‘ரெஸ்’ என்றால் லத்தீன் மொழியில் ‘பொருள்’ என்று பொருள். ஆனால் 18–ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி விஸ்வரூபம் எடுத்த காலத்தில் ‘ரியல்’ எனும் சொல் ‘சொத்து’ என்பதைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்தில் வரலாயிற்று.
எஸ்டேட் எனும் சொல் இயற்கையான ஆதாரங்களைக் குறிக்கும் பதமாகும். ஆக, ரியல் எஸ்டேட் எனும் சொல் வழக்கு ‘பயிர்கள், கனிம வளம், நீர் ஆதாரம் ஆகியன உள்ளிட்ட அசையாச் சொத்தை’ குறிக்கும் சொற்றொடராக பரிமாணம் அடைந்தது. இன்று இந்த அர்த்தத்தில்தான் ‘ரியல் எஸ்டேட்’ எனும் சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இன்று ரியல் எஸ்டேட் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகும் ஒருவர், அந்தச் சொத்தின் அனைத்துப் பயன்களுக்கும் உரிமையாளர் ஆகிறார். அந்தச் சொத்தின் அடியில் இருக்கும் கனிம வளத்துக்கும் கூட அவரே அதிபதி ஆகிறார.
No comments:
Post a Comment