Friday 1 December 2017

மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'



மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'






கர்ப்புறங்கள் அல்லது புறநகர் பகுதிகளில் உள்ள காலியிடங்கள் அல்லது மனைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட ‘டை லைன்’ சர்வே முறை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பூமி அல்லது மனைகளின் கோண அளவுகளையும் சரியாக அளவிட இந்த முறை உதவுகிறது.   


தெருக்கள் சந்திப்பு



குறிப்பிட்ட ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் சந்திக்கும் இடங்களில் அமைந்துள்ள மனைகளின் சரியான அளவுகளை கண்டறிவது அவசியமானது. நான்கு பக்கங்கள் அளவு கொண்ட மனைகளைப்போல அவற்றை சுலபமாக அளவிடுவது கடினம். மேலும், மனைகளின் அளவு மற்றும் சாலைகள் சந்திப்பின் பரப்பளவு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு அளவீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.



சீரற்ற மனைகள்



ஒரு சில மனைகளின் பரப்பளவு ஓரங்களில் வளைந்தும், சில இடங்களில் சீரற்றதுமாக அமைந்துள்ள நிலையில், அவற்றின் அளவுகள் மற்றும் நிலத்தின் எல்லைகள் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதோடு, நிலத்திற்கான எல்லைகளையும், சாலைகளின் சந்திப்பையும் வரையறை செய்வதும் அவசியம்.



முக்கிய அலகுகள்



குறிப்பாக, நிலத்தின் அடியில் மறைந்துவிட்ட அடையாளத்திற்கான எல்லை கற்களை கண்டறிந்து அதன் அடிப்படையில், இதர அலகுகளை கண்டறிய வேண்டும். நிலையான கட்டிட அமைப்பின் வளைவு பகுதிகள், மின்சார கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றையும் முக்கிய அலகுகளாக கணக்கிட்டும் மனைகளின் அளவுகளை கண்டறிவது வழக்கம். மேற்கண்ட முறைகளில் மனையின் அளவீடுகளை கணக்கிடும்போது ‘டை லைன் சர்வே’ முறையை பயன்படுத்தி அரையடி வித்தியாசம் கூட இல்லாமல் பணிகளை சரியாக முடிக்க இயலும் என்று சர்வே என்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.

-RCS

No comments:

Post a Comment