Saturday, 16 December 2017

வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை




வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம்.
வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள் அமைந்துள்ள இடங்களுக்கு, அவற்றின் சந்தை மதிப்புகளை பொறுத்து அரசின் வழிகாட்டி மதிப்பு (Guide line value) வெவ்வேறு விதங்களில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம். அந்த மதிப்பிற்கேற்ப ஆவணங்களை தயார் செய்யும்போது, முழு மதிப்பிற்கும் முத்திரைத்தாள் வாங்க முடியாத நிலையில், குறிப்பிட்ட மதிப்புக்கு வாங்கிவிட்டு மீதி உள்ள மதிப்பை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம்.

பதிவு கட்டணம்

மேற்கண்ட கட்டணத்தை செலுத்த 41 என்ற படிவத்தில் வாங்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு, வாங்க வேண்டிய முத்திரைத்தாள் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து பத்திரத்துடன் இணைத்து தாக்கல் செய்யவேண்டும். மீதி கட்டணம் ரூ. ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டிருந்தால்கேட்பு வரைவோலையாக’ (DEMEND DRAFT) மீதி தொகையை செலுத்த வேண்டும். அரசு வழிகாட்டி மதிப்பிலிருந்து பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் மற்றும் கணினி கட்டணம் ரூ. 100 ஆகியவற்றையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையில் ரூ. ஒரு ஆயிரம் வரை பணமாகவும், அதற்கு மேற்பட்ட கட்டணத்தைகேட்பு வரைவோலையாகவும்செலுத்தவேண்டும்.

பத்திர பதிவு

முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரி பார்த்தபின்னர், சார்பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணை குறிப்பிடுவார். பின்னர் விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும்.

பத்திரம் பெறுதல்

பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் ஆகியோர் கையொப்பமிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து, இரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தமது பத்திரத்தை சொத்து வாங்கியவர் பெறலாம். வேறொருவர் வாங்க வேண்டியதிருந்தால், ரசீதில் அவர் கையொப்பமிட வேண்டும்.

பெண்டிங் டாக்குமெண்ட்

பத்திரப்பதிவின் போது அரசு வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் வாங்குவது அவசியம் என்றாலும், அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு அதிகம் என்று கருதுபவர்கள் அவர்களே சொத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்து அதன் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை கணக்கிட்டு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பதிவு செய்த பின்னர் ‘pending document' என்று முத்திரை இடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பிரிவின் அலுவலர் மூலம் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தையும், சுற்றிலும் அமைந்துள்ள மற்ற சர்வே எண்களின் மதிப்பையும் கணக்கிட்டு, முன்னர் குறிப்பிட்டிருந்த அரசு வழிகாட்டி மதிப்பில் வித்தியாசம் உள்ளதா..? என்பதை முடிவு செய்வார் அல்லது அவரே மதிப்பை நிர்ணயம் செய்வார்.

வித்தியாச கட்டணம்

ஒரு வேளை அரசு வழிகாட்டி மதிப்பு சரியாக இருப்பதாக தெரியும் பட்சத்தில் அந்த தொகைக்கும், நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக செலுத்தவேண்டும். அதன் பிறகு பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47-கி பிரிவு என்று சொல்லப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டு, அங்கு சென்று வித்தியாச கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெற்று கொள்ளலாம்.

-RCS -

Thursday, 7 December 2017

வீட்டு வாடகைச் சட்ட வரைவு




வீட்டு வாடகைச் சட்ட வரைவு: யாருக்கு நன்மை?


டந்த இருபதாண்டுகளில்தான் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகப் பெரிய வளர்ச்சி
கண்டது. தங்களின் தேவைக்கு அப்பாற்பட்டு மக்கள் மனைகளை, வீடுகளை முதலீட்டுக்காக வாங்கிக் குவித்தனர். இந்த இடத்தில்தான் வீட்டை வாடகைக்கு விடுவதும் பெரிய தொழிலானது. சிறு நகரங்களைவிட சென்னை, மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் இது இருபதாண்டுகளில் லாபகரமான தொழிலாக ஆனது. வெளியூர்களிலிருந்து வேலைக்காக வருபவர்களின் இருப்பிடப் பற்றாக்குறையை இந்த வாடகை வீடுகள் நிறைவேற்றின.

ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் ஐடி துறையின் வளர்ச்சி போன்ற பல காரணங்களாலும் வாடகை வீட்டுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்துவந்தது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் அவர்களாகவே வாடகை வீடு குறித்த புதிய விதிமுறைகளை இயற்றிக்கொண்டனர். அதாவது 10 மாத வாடகையை முன்பணமாகக் கொடுக்க வேண்டும், வெள்ளையடிக்கக் கட்டணம் தர வேண்டும், உரிமையாளர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்யச் சொல்லலாம், விருந்தினர்கள் தங்கக் கூடாது என விதிமுறைகளை உருவாக்கினர்.

இந்தப் புதிய விதிமுறைகள்தான் சென்னை முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன. அதுபோல வீட்டுக்கான தேவையை வைத்தே வாடகையும் நிர்ணயம் செய்யப்பட்டுவந்தது. உதாரணமாக நுங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற சென்னை மத்தியப் பகுதியில் ஒரு படுக்கையறை வீடே ரூ. 10,000 முதல் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. கோடம்பக்காம், கே.கே.நகர், அசோக்நகர் பகுதிகளில் அடுத்த கட்டமாக ரூ. 9,000 முதல் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. வாடகை குறைவாக இருந்த நங்கநல்லூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளிலும் இப்போது வாடகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வாடகை நிர்ணயத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதில் புதிய விதிமுறையாக முதல் மாத வாடகையை முன்கூட்டியே முன்பணத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பதையும் வீட்டு உரிமையாளர்கள் உருவாக்கினர்.

இந்நிலையில் வாடகைதாரரின் உரிமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. இது மட்டுமல்லாது குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் வீடு தருபவர்கள் உண்டு. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடு தர மறுப்பவர்கள் உண்டு. இதைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் இல்லை.

ஆனால், வாடகைதாரர் - உரிமையாளர்கள் உரிமைகள் குறித்து வீட்டு வாடகைச் சட்டம் 1960 அடிப்படை விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால், அது பின்பற்றப்படுவதில்லை. வாடகை மிகப் பெரிய சந்தையாக வளர்ச்சி பெற்றிருக்கும் காலகட்டத்தில் அந்தச் சட்டம் இதுநாள்வரை திருத்தப்பட்டதும் இல்லை. இந்நிலையில் கடந்த மாதம் வீட்டு வாடகைச் சட்ட திருத்த வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வாடகைச் சட்டத்தின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படியில் இந்தச் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் உரிமையாளர்களுக்குக் கூடுதல் உரிமைகளை வழங்குகிறது. உதாரணமாக 1960 சட்டத்தின்படி மாநில அரசுக்குத் தேவை இருக்கும்பட்சத்தில் காலியாக உள்ள ஒரு கட்டிடத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வாடகைக்கு எடுக்க முடியும். இந்தப் புதிய வரைவில் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அதை வாடகைக்கு எடுக்கச் சட்டம் இடம் தராது.
இந்தச் சட்ட திருத்தில் வாடகைதாரர் பெரிதும் எதிர்பார்த்த வாடகையை ஒழுங்குபடுத்தும் அம்சம் இல்லை. தேவையை முன்னிட்டே வாடகை நிர்ணயிக்கப்படுவது தொடர்ந்துவருகிறது. உதாரணமாக ரூ.2,000 வாடகைக்குப் போகக் கூடிய ஒரு வீட்டை, அதிகமானோர் கோருவதால் அந்த வீட்டை உரிமையாளர் ரூ.6,000 வாடகைக்குக் கொடுக்க முடியும். இதைக் கட்டுப்படுத்த இந்தச் சட்ட வரைவில் விதிமுறைகள் இல்லை. அதே சமயம் வீட்டு வாடகையை உரிமையாளர் - வாடகைதாரர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயம் செய்யலாம் எனச் சொல்கிறது இந்த வரைவு. இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுபோல வாடகையை உரிமையாளர் நிர்ணயிக்கும் நிலையே தொடரும் என எதிர்பார்க்கலாம்.

வாடகைதாரர் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அம்சம், வாடகைக்கான முன் பணத்தை இந்தச் சட்ட வரைவு திட்டமாக வரையறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகையில் மூன்று மடங்கை முன்பணமாகத் தந்தால் போதுமானது. அதாவது மூன்று மாத வாடகைப் பணம். மேலும், ஒவ்வொரு மாத வாடகைக்கான ரசீதையும் வாடகைதாரருக்கு உரிமையாளார் வழங்க வேண்டும் என இந்தச் சட்ட வரைவு கூறுகிறது. மேலும் வெள்ளையடித்தல், குடிநீர்க் குழாய்களை மாற்றுதல் போன்ற பெரிய பணிகள் வீட்டு உரிமையாளரின் பொறுப்பு என்பதை இந்த வரைவு உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் சிறு சிறு பணிகள் வாடகைதாரர் பொறுப்பு என்கிறது வரைவு. இதில் இருதரப்புக்கும் இடையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரரைக் காலிசெய்ய வைக்க நடைமுறைச் சிக்கல்கள் பல
இருந்தன. இந்தப் புதிய சட்ட வரைவு அதற்கு வழிவகை செய்கிறது. உரிமையாளர் ஒப்பந்தக் காலத்தில் சொன்ன கால வரம்புக்கு மேல் வாடகைதாரர் அந்த வீட்டில் வசிக்க முடியாது.


வீட்டு உரிமையாளர் வாடகை வீட்டைப் பார்க்க விரும்பினால் 24 மணி நேரத்துக்கு முன்பு வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல் காலை 7 மணிக்கு முன்போ இரவு 8 மணிக்குப் பிறகோ வீட்டைப் பார்க்க முடியாது. இவை வாடகைதாரருக்கு நன்மையளிக்கும் அம்சங்கள். இவை அல்லாது வாடகைப் பிரச்சினைகளை மேலாண்மை செய்வதற்காக மாவட்ட ஆட்சியரின் கீழ் வாடகை அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். வாடகைதாரர் - உரிமையாளர் சிக்கல்களைக் களைய வாடகைத் தீர்ப்பாயமும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தச் சட்ட வரைவில் சில பலவீன அம்சங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு அப்பால் வாடகைதாரர், உரிமையாளார் இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் பல விஷயங்களும் இந்தச் சட்ட வரைவில் இருக்கின்றன. 1960 வாடகைச் சட்டத்தில் கூறப்பட்ட விஷயங்களே இப்போது நடைமுறையில் இல்லை. இந்நிலையில் இந்தப் புதிய சட்டத்தின் சவாலே அதை நடைமுறைப்படுத்திவதில்தான் இருக்கிறது
-RCS.

Monday, 4 December 2017

சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்



சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். அந்தச் சொத்து தொடர்பாக ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அம்மாதிரி விஷயங்களில் முதன்மையானது, வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவுசெய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், 2009-ம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமானது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.

பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்த பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009-ம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது. 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டர்னியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்தச் சேவை எந்தெந்த ஊர்களுக்கு இருக்கின்றன என்ற விவரமும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்
-RCS

Sunday, 3 December 2017

#Msand மணலின் சாதகமும் பாதகமும்!





 மணலுக்குப் பதில் எம் சாண்ட் தான்... 

#Msand  மணலின் சாதகமும் பாதகமும்



















தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகள் அனைத்தையும் ஆறு மாதத்துக்குள்
மூட வேண்டுமெனமதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி இந்த தீர்ப்பு. இது வரவேற்கத்தக்கது," என அரசியல் தலைவர்கள் பலர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். பொதுச்சொத்தை சூறையாடும் இந்த வேலைக்கு ஆதரவாக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 20 ஆண்டுகளாக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக விவசாயிகளும், சூழலியாளர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கட்டுமானத்தொழில் முழுமையாக முடங்கும் என்றும், கட்டுமானத் தொழிலாளர்கள், மணல் லாரி ஓட்டுநர்கள் என 2 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

ஆற்று மணல் எடுக்க முடியாது என்ற சூழல் உருவானால், அதற்காக கட்டுமானங்களைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது. கட்டுமானம் உருவாக மணல் என்பது இன்றியாமையாதப் பொருள்.எனவே மணலுக்கான மாற்று ஒன்றைத் தேர்வு செய்வது தான் இதற்குத் தீர்வாக இருக்கும். அதன்படி மணலுக்கு இப்போது உள்ள ஒரே மாற்று  M-Sand எனப்படும் Manufactured Sand.

கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் இந்த மணல், எம் சாண்ட் என அழைக்கப்பட்டாலும், CS Sand (Crushed Stone Sand) என்ற பெயரில் தான் அரசால் அனுமதிக்கப்பட்டு வருகிறது. "ஆற்று மணலை விட செயற்கை மணல் தரமானது. இதனுடன் சிமென்ட் சேரும் போது நிற வித்தியாசம் இருக்காது. உறுதியானது இல்லை என்ற அச்சம் தேவையற்றது." என்றே எம் சாண்ட் குறித்து சொல்கிறார்கள் அதன் உற்பத்தியாளர்கள். உண்மையில் எம் சாண்ட் என்பது பாதுகாப்பானது தானா என்பது தொடர்பாக விசாரித்தோம்.

எம் சாண்ட் தயாராவது இப்படித்தான்... 

கருங்கல் ஜல்லியை உடைத்து நொறுக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுவது தான் எம் சாண்ட் எனப்படுகிறது. ஜல்லி கற்களை மண் போல நொறுக்கி எடுப்பது தான் எம் சாண்ட். தயாரிப்பின் போது பவுடர் போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீரில் கழிவுகளாக வெளியேற்றப்பட்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. ஆற்று மணலை விட வேகமாக செட் ஆகும் என்றும், ஆற்று மணலைவிட உறுதியானதும் என்றும் சொல்லப்படுகிறது
  
தமிழகத்தில் எம் சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எம் சாண்ட் தயாரிக்கும் ஆலைகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் அதை ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 100க்கும் அதிகமான ஆலைகளில் எம் சாண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம் சாண்டின் 'ப்ளஸ்'கள்

ஆற்று மணலை விட சக்தி மிக்கது, தரமிக்கது; கட்டுமானத்துறையின் தர நிர்ணயத்தின் தரத்தில் இருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்க சரியான மாற்று; சிமென்ட் உடன் சேரும் போது வித்தியாசம் இருக்காது; ஆற்று மணலை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை குறைவு என எம் சாண்ட்க்கு பல ப்ளஸ்கள் உள்ளது.

இது தொடர்பாக எம் சாண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகனிடம் பேசினோம். "ஆற்று மணலோடு ஒப்பிட்டு எம் சாண்ட் தரமற்றது என அஞ்ச வேண்டிய அவசியமில்லை. எம் சாண்ட் காவிரி மணலை விட சீக்கிரம் செட் ஆகும். க்ரிப்பும் நன்றாக இருக்கும். ஆனால் எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை சரியாக இருக்க வேண்டியது அவசியம். எம் சாண்ட்டில் கல்குவாரி துகள்கள் கலக்கக் கூடாது. நாங்கள் அரசு சொல்லும் விதிகளின் அடிப்படையில் நாங்கள் எம் சாண்ட் தயாரித்து வருகிறோம்," என்றவர், "எம் சாண்ட் சக்தி மிகுந்தது. ஆனால் இதன் நிலைப்புத்தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்றும் நம்மிடம் சொன்னார்.

இவையெல்லாம் தான் 'மைனஸ்'

ஆற்று மணல் தடை விதிக்கப்பட்டால் எம் சாண்ட் தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அதே சமயம் எம் சாண்டில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் எம் சாண்ட் அதிகளவில் பயன்படுத்தும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளாவில் ஒவ்வொரு முறை எம் சாண்ட் விற்கப்படும் போது ..டி பொறியாளர்கள் அதை ஆய்வு செய்து அனுமதித்த பின்னரே அதை விற்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தர பரிசோதனை நடக்காமல் அதை விற்பனை செய்ய முடியாது.

காரணம் எம் சாண்டில் கல்குவாரி துகள்கள் கலந்திருந்தால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எம் சாண்ட் குவாரி உரிமையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். தமிழகத்தில் பல எம் சாண்ட் குவாரிகளில் கல்குவாரி துகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன. கல்குவாரி துகள்களின் அளவு கூட கூட... கட்டடங்களின் ஆயுள் என்பது வெகுவாக குறையும். 50 சதவீதம் அளவுக்கு மேல் கல்குவாரி துகள் கலந்திருந்தால் கட்டடத்தின் ஆயுள் காலம் சில ஆண்டுகள் தான்"  என்கிறார்கள் கட்டுமான தொழிலில் உள்ளவர்கள்அதேபோன்று எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை நன்றாக கலக்க வேண்டியது அவசியம். கலவை சரியாக இல்லை என்றாலும் கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள்.


தரத்தைக் கடந்து கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் கால நிலை

சிக்கலும் இருக்கிறது. கேரளா குளிர்ச்சியான பகுதியாக இருக்கிறது.

இதனால் நிலைப்புத் தன்மையில் சிக்கல் இருக்க வாய்ப்புகள் 

குறைவு. ஆனால் தமிழகம் சூடு மிக்க பகுதியாக இருப்பதால் 

நிலைப்புத் தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி

செய்யப்படாமலே இருக்கிறது. இதை எம் சாண்ட் குவாரி

உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

-RCS



Friday, 1 December 2017

Electronic archive (DIGI LOCKER ) protecting documents





Electronic archive protecting documents


The new technological digital locker (Digi Locker) is now being introduced to protect the home and land bonds from natural disasters such as rainfall and fire.

Do not have paper

Securing documents with the electronic log of the Digi locker is possible in modern technology. This method is the function of the Online Document Storage Facility. It can easily store the information stored on a safe-looking person or send copies to a particular office. The scheme was introduced by the Government on paper based on Paperless Governance.

Basic Information

Those who want to use Digi Locker should provide basic information such as their Aadhaar number and mobile phone number. Digi locker will be provided with other documents confirming the location in the absence of an Aadhaar number.

Internet Archive

After registering the above information on the website www.digilocker.gov.in, the password will be sent to the respective mobile number OTP as a password. After the passwords are recorded, the account will be opened after all other details are requested. Then you can use the label using the user name and password. All of the securities and certificates are scanned and placed as electronic documents in the Internet box.


Personal files

The above facility can scan property documents and other certificates and store them in the Internet box. All documents are classified as separate files according to the Aadhaar number.

Self Profile

After registering the electronic archive, you can visit all the details mentioned in the photo, name, address and Aadhaar card application to go to the Self-Profile of the relevant account on the website.

Free registration

You can download 10 megabytes of free files in this box. There is also the possibility of increasing its size depending on its usability. In particular, the use of automated timer security (Auto Time Log Out) is used to prevent other people from seeing others' files.

It's easy to share


it is easy to send all the necessary documents to the government. Furthermore, documents and certificates can be downloaded from anywhere in the box and sent directly to the relevant department or other locations from anywhere. The scheme has been initiated by the government on any occasion to share documents online at any time. You can keep all the documents of the family or the concerned family individually in this website

-RCS

மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'



மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'






கர்ப்புறங்கள் அல்லது புறநகர் பகுதிகளில் உள்ள காலியிடங்கள் அல்லது மனைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட ‘டை லைன்’ சர்வே முறை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பூமி அல்லது மனைகளின் கோண அளவுகளையும் சரியாக அளவிட இந்த முறை உதவுகிறது.   


தெருக்கள் சந்திப்பு



குறிப்பிட்ட ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் சந்திக்கும் இடங்களில் அமைந்துள்ள மனைகளின் சரியான அளவுகளை கண்டறிவது அவசியமானது. நான்கு பக்கங்கள் அளவு கொண்ட மனைகளைப்போல அவற்றை சுலபமாக அளவிடுவது கடினம். மேலும், மனைகளின் அளவு மற்றும் சாலைகள் சந்திப்பின் பரப்பளவு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு அளவீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.



சீரற்ற மனைகள்



ஒரு சில மனைகளின் பரப்பளவு ஓரங்களில் வளைந்தும், சில இடங்களில் சீரற்றதுமாக அமைந்துள்ள நிலையில், அவற்றின் அளவுகள் மற்றும் நிலத்தின் எல்லைகள் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதோடு, நிலத்திற்கான எல்லைகளையும், சாலைகளின் சந்திப்பையும் வரையறை செய்வதும் அவசியம்.



முக்கிய அலகுகள்



குறிப்பாக, நிலத்தின் அடியில் மறைந்துவிட்ட அடையாளத்திற்கான எல்லை கற்களை கண்டறிந்து அதன் அடிப்படையில், இதர அலகுகளை கண்டறிய வேண்டும். நிலையான கட்டிட அமைப்பின் வளைவு பகுதிகள், மின்சார கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றையும் முக்கிய அலகுகளாக கணக்கிட்டும் மனைகளின் அளவுகளை கண்டறிவது வழக்கம். மேற்கண்ட முறைகளில் மனையின் அளவீடுகளை கணக்கிடும்போது ‘டை லைன் சர்வே’ முறையை பயன்படுத்தி அரையடி வித்தியாசம் கூட இல்லாமல் பணிகளை சரியாக முடிக்க இயலும் என்று சர்வே என்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.

-RCS